ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து சிரியா மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல அமெரிக்கா மற்றும் சவுதி அரோபியாவுக்கு மறைமுக எச்சரிக்கை என உலக நாடுகள் கருதுகின்றன.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமான சேவை தொடங்கியது. காபூல் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.
நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை ஜூன் 29, 30-ந்தேதி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.