ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இல்லையென, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வௌ்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் நிவாரணக் குழுக்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் உத்தரவிட்டுள்ளார்
காலி, ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில், யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான பெளத்த பிக்கு மற்றும் அவரது சாரதி ஆகியோர் இரண்டு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீர் திடீர் என பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்களைக் காணும்போது அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அதிக இனிப்பு உணவுகளை வழங்கியது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. மொத்தம் 23 நாட்கள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினையை எழுப்ப தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.