அரசு மணல் குவாரி முறைகேடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, “கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது” என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கோல் அடித்து 2 – 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியை சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளதால் நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய விஜய் மல்லையாவின் சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்வதற்காக அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடங்கும் என்று சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
பொத்துவில் ரொட்டை பிரதேசத்தில் தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியை கத்தியால் குத்த முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட முன்னாள் போரளி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.