வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் ரம்ஜானையொட்டி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், தலிபான்கள் விரும்பினால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் என அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில், முன்னாள் அதிபர் பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை, சுவிஸ் வங்கியிலிருந்து மீட்டு, அதை, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரபல வீரர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர் உரிமத்திற்கான புதிய விதிமுறையை எதிர்த்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.