மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.”
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து போக்குவரத்துதுறை ராஜாங்க மந்திரி ஜோ ஜான்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.