தென்னவள்

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Posted by - January 3, 2019
பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன.…
மேலும்

புதிய அரசியல் யாப்பு நியாயமானதாக இருந்தால் மக்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள் !

Posted by - January 2, 2019
ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள். தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன் ஏனெனில் இது…
மேலும்

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் – மாவை

Posted by - January 2, 2019
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதாக நாங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் சிக்கல் நிலைக்கு தீர்வுகாணப்பட்ட பின்னர்,…
மேலும்

வாகனங்களை வாடகைக்கு பெற்று ஏமாற்றிய இருவர் கைது

Posted by - January 2, 2019
சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்த இருவர் மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஹோமாகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 56 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  ஹோமாகம…
மேலும்

கட்சி தாவ வைத்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்!

Posted by - January 2, 2019
பணம் மற்றும் பதவிகளை லஞ்சமாக வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிதாவ வைக்க முயற்சித்த அனைவருக்கும்  சட்டத்தினால் தண்டனை வழங்கப்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் அரசியல் மாற்றத்துக்காக…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கோதபாயவுக்கு இல்லை!

Posted by - January 2, 2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூறிவருகின்றதுடன் மக்கள் மத்தியிலும் பரவலாக ஊகங்கள் நிலவுகின்ற போதிலும் அவருக்கு அத்தகைய உத்தேசம் எதுவும் இல்லை என்று நம்பகமாகத் தெரியவருகின்றது.…
மேலும்

சூழ்ச்சியால் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சி இன்னும் ஓயவில்லை – நிரோஷன் பெரேரா

Posted by - January 2, 2019
சுதந்திரக்கட்சி, பொதுஜனபெரமுன கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டாலும் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகார முறைமையை கையாள முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பு மிலோதா கட்டத்தொகுதியில் அமைந்துள்ள தனது அமைச்சில் உத்தியோகபூர்வமாக…
மேலும்

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முயற்சிப்போம்!

Posted by - January 2, 2019
உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகள் என்பன இடம்பெறுகின்றன. அவர்களது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம். அந்த விஷயத்தில் சம்பந்தப்படுபவர்கள்…
மேலும்

ஊடக சுதந்திர சுட்டியில் முன்னேறியுள்ள இலங்கை!

Posted by - January 2, 2019
உலக பத்திரிகை சுதந்திர நிறுவனம் (வேள்ட் ப்ரெஸ் ப்ரீடம்) வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, 2017ம் ஆண்டில் 141வது இடத்தில் இருந்த இலங்கை 2018ம் ஆண்டில் 131வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே…
மேலும்

போலி கஜமுத்துக்களுடன் இருவர் கைது!

Posted by - January 2, 2019
போலி ஏழு கஜமுத்துக்களை ஒன்றரைக் கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் மகியங்கனைப்பொலிஸாரால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கஜமுத்துக்கள் குறித்து மகியங்கனைப் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கவே பொலிஸார்  மாற்றுடையில் கஜமுத்துக்களை கொள்வனவு செய்பவர்கள் போன்று கஜமுத்துக்கள் விற்பனை செய்பவர்களிடம்…
மேலும்