சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டப்படுத்தவதற்காக புலனாய்வுப்பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயனது ;அவசர தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டிய தொற்று நோய் ; என பிரகனடப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டள்ளது.