பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச சபையின் சுகாதார பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து அப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இன்று பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை சற்று முன்னர் மக்கள் வங்கி செலுத்தியுள்ளமை தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் மொரகொல்ல நீர்மின் திட்டத்தினூடாக 30.5 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்வட்டத்திற்கு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சரான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட 229 பில்லியன் ரூபா பாரிய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய பணவீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது. அதுபோன்ற எண்ணம் எனக்கு எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றபோது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சி மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். பிரதமர் மோடி கட்சிக்கு அப்பாற்பட்டவர். உலகத்தில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை.
நீலகிரி மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.