முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் இரங்கல் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிங்கபூர் பிரஜை வசிக்கும், தலங்கம பெலவத்தை வீட்டை திடீர் சோதனைக்கு உட்படுத்திய போது, அங்கிருந்து சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகத்தின் பேரில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
2 நாள்களுக்கள் பொத்துவில் பிரதேசத்தில் 54 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவு சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர். ஏ.யூ. அப்துல் சமட், இன்று (12) தெரிவித்தார்.
பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையேற்கும் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் (11) காலை 9.30மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (12) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.