மட்டக்களப்பு, வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற இலட்சுமணன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்ற ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கும் மனைவிக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க முடியாமையால் அக்குடும்பத் தலைவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், களுத்துறை மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால், 12 வயதுக்கு கீழே நான்கு பிள்ளைகளும் அவரது மனைவியும் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
ரயிகளுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 3 நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளுவதற்கான அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.
நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.