ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏழைகளுக்கு மேலதிகமாக பணக்காரர்களும் உணர்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அவ்வாறு ஜெனிவா தீர்மானத்தில் அப்பொறிமுறையை இணைப்பதற்காக தொடக்கத்திலிருந்தே உழைத்தது பி.ரி.எஃப் எனப்படும்…
பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதை விட முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழ் மக்களது நிலைப்பாடாக இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல் திட்டத்தில், டி.எல்.எப். நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.