இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷக்களுக்கு எதிராகச் செயற்படக்கூடிய எந்தவொரு அரசியற் கட்சிகளுடனும் செயற்படத் தயார் என 43ஆவது படையணின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு விடுத்துள்ளார்.
மலையகத்தில் பல பகுதியில் எரிவாயு (கேஸ்) விநியோகம் இன்று (27) இடம்பெற்றன. எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக, மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதனையும் காணக்கூடியதாக இருந்தது. நுகர்வோரில் பலர், சிலிண்டரை பெற்றுக்கொள்ளாது வீடுகளுக்குத் திரும்பிவிட்டதை அவதானிக்க முடிந்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதை விட்டு விட்டு, இதை வைத்து அரசியல் செய்வதை கட்சித் தலைவர்கள் கைவிட வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
மிகைக் கட்டணவரி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை ஏப்ரல் 07 ஆம் திகதி நடத்துவதற்கு பிரதி சாபநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷியா 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷிய தாக்குதலில் இழந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உக்ரைன் படைகள் முயற்சித்து வருகின்றன.