கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அவசரகால ;சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது.
தற்போது நாட்டுமக்கள் விரும்புகின்ற ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டுமாயின், முதலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதன்மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒருவர் பொதுத்தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படவேண்டும்.
குருணாகலிலுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டை சுற்றிவளைப்பதற்கு ஆயிரக்கணக்காக மக்கள் நேற்று முன்தினம் சென்ற போது அவர் ஒழிந்ததாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு நிபுணர்களால் முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் தெரிவித்துள்ளார்.