;உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், அவரை அழைத்து விசாரிப்பது தொடர்பில் சி.ஐ.டி.யினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
காலி, தொடந்துவ பகுதிக்கு அப்பால் உள்ள ஆழ் கடற் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 620 கோடி ரூபா வரை பெறுமதியான 300 கிலோ ஹெரோயின் மற்றும் 25 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ். சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி அராலி மத்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை கெந்தகொல்ல யோதுன் உள்பத்த பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி கலந்துகொள்ளுமாறும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளுக்கு உணர்வுபூர்வமாக செவிசாய்த்து, நாடு எதிர்நோக்கியுள்ள உக்கிரமான பொருளாதார நெருக்கடியை தீர்க்க வெளிப்படையாகவும் நேர்மையான நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என கொழும்பு…
பிரதமர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள போதும் எமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பயனும் இல்லை என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.