வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
தருமபுரம் நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் மறைத்து எடுத்து சென்ற 40 லீற்றர் கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.