உக்ரைனிய அகதிகளுக்கு இடமளிக்க தற்காலிக அரசு வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களை ஜேர்மனி மாற்றியுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் தொடக்கம் கணேசபுரம் வரையிலான நகர்ப்பகுதிகளில் மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளை முகாமை செய்வதற்கான விடயங்கள் குறித்து விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாணத்துக்கான புதிய பொலிஸ் மா அதிபர் பியந்த வீரசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேதவெல ஆகியோர் பொலிஸ் நிலையங்களுக்கு இன்று திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
றம்புக்கணயில் அண்மையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மலையகம் உள்ளிட்ட தோட்டப்புறங்கள் மற்றும் நகரங்களில் 300 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியாவில் இன்று (28) மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
வவுனியா, செட்டிகுளம்- நேரியகுளம் வீதியில் டயர் போட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.