இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் ; என நாம் நாட்டுப் பாடகியான யொஹானி மும்பையில் வைத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு வாகனம் தவிர மற்ற வாகனங்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.