தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது வெள்ளிக்கிழமை (19) காலை மன்னார் நகரப் பகுதியை வந்தடைந்தது.
கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக ரூ.150 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய வைத்தியசாலை தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் நேற்று வியாழக்கிழமை (18) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைமையகத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய 16 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு வியாழக்கிழமை (18) நியமிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வருகின்றனர்.
தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.
தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட‘நீலப் பொருளாதாரம்’ அதாவது கடல்வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை என்று துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
டெட் தேர்வு வழக்கு தீர்ப்பில் இந்த மாத இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.