ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் (தெற்காசியா) அதுல் கேஷப் (Atul Keshap) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரலாற்றாசிரியர் கலாநிதி அர்ஷியா லோகந்த்வாலா (Dr. Arshiya Lokhandwala) நெறிப்படுத்தப்பட்ட, “பெண்ணியத்தின் எதிர்காலம்: கலை, செயல்பாடு மற்றும் தெற்காசியப் பெண்” எனும் தலைப்பிலான தெற்காசியப் பெண்ணிய கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய கலைக் கண்காட்சியைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிப்பது போலவே, 323 கொள்கலன்களுடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். முழு நாடும் இந்தக் கேள்விக்கான பதிலுக்காகவே காத்திருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து அண்மையில் சுமார் 12 இலங்கையர்கள் மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனைப் பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.