நேற்று (10) காலை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணியை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மன் நகர மேயர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட விடயம் ஜேர்மனியில் பரபரப்பை உருவாக்கிய நிலையில், அவரை அவரது மகளே தாக்கியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு வெள்ளிக்கிழமை (10) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி பயிற்சித் திட்டத்தினை நடத்தியுள்ளது.