நெதர்லாந்தில் நடைபெற்ற பெரும் கண்காட்சியில் பல நூற்றுக்கணக்கான எம் உறவுகளுடன் வேற்று இனத்தவர்களும் பங்குபற்றி எமது இனம் சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டனர். இங்கு தமிழர் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், தமிழீழ வளங்கள், என்பவற்றுடன் நடைபெற்று முடிந்த தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின…
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்களில் ஒன்றான பொண் தமிழாலயம் தனது முத்தகவை நிறைவு விழாவைக் கடந்த 14.09.2024 சனிக்கிழமை 14.00 மணிக்கு தேசியம், மொழி, பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு பயணித்த மக்களையும் மாவீரர்களையும் நினைவேந்தி, பொதுச்சுடரேற்றித் தொடங்கியது.…
20.09.2024 த.வெள்ளையன் அவர்களிற்கு ஆழ்ந்த இரங்கல் சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல், தமிழினத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் வெள்ளையன் அவர்கள், உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி…
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நிறைவாகக் கடந்த 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வடமத்திய மாநிலத்தில் அமைந்துள்ள கம் (Hamm) எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்…
சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் நாள் நகைபபறவுள்ளது. தாயகத்தில் வாழும் உறவுகள் ஒற்றை ஆட்சிக்குள் எம்மை அடக்கியாளும் இச்சனாதிபதித் தேர்தலை முழுகமயாக புறக்கணிப்பது தான் வரலாற்றுக்கைகமயாகும்.
சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினைந்தாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்…