நிலையவள்

முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் பலி!

Posted by - April 14, 2017
ஹம்பாந்தொடை -ஆலோக்கபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. 58 வயதுடைய நபரே இதன் போது உயிரிழந்துள்ளார்.
மேலும்

கிண்ணியாவில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞரின் பரிதாபமான நிலை

Posted by - April 14, 2017
கிண்ணியாவில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மின்கம்பந்தத்தில் மோதி உயிரிழந்துள்ளார். திருகோணமலை – கிண்ணியா காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு  உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட மூவரில், குறித்த இளைஞர் மின் கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுடைய இளைஞரே…
மேலும்

இம்முறை புத்தாண்டில் சதொசவுக்கு கடந்த வருடத்தை விட அதிக வருமானம்

Posted by - April 14, 2017
இவ்வருட சித்திரைப் புத்தாண்டில் சதொச விற்பனை நிலையங்கள் கடந்த புத்தாண்டுக் காலத்தை விடவும் அதிக வருமானத்தை  ஈட்டியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதின் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரண…
மேலும்

கடந்த 24 மணி நேரத்தில் காலி மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

Posted by - April 14, 2017
கடந்த 2 4 மணித்தியால காலத்தில் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி காலி மாவட்டத்திலுள்ள போத்திவெல பகுதியில் பதிவாகியுள்ளது. இப்பிரதேசத்தில் 128.9 மி.லீட்டர் மழை பெய்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு குறிப்பிடத்தக்களவு மழை பெய்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசம் தவிர்ந்த…
மேலும்

மீதொடமுல்லை குப்பை மேடு இடிந்து விழுந்ததில் 40 வீடுகள் சேதம்

Posted by - April 14, 2017
கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 40 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் 3 மணியளவில் குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழ ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு…
மேலும்

சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்த அங்கொட லொக்கா

Posted by - April 14, 2017
பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அண்மையில் களுத்துறையில் சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் படுகொலைச் சம்பவத்துடன் அங்கொட லொக்காவிற்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.…
மேலும்

SAITM கல்லூரிக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்

Posted by - April 14, 2017
மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என, ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர…
மேலும்

சுத்தமான நீர் கிடைக்க முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும்-உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

Posted by - April 14, 2017
சுத்தமான நீரும், சுகாதாரமும் கிடைக்க உலக நாடுகள் இணைந்து முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் 200 கோடி…
மேலும்

வெளிநாட்டு கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில்

Posted by - April 14, 2017
தற்போதைய அரசாங்கம் இதுவரை பெற்றுள்ள வெளிநாட்டு கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காகவே 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அதிகளவான கடன்கள் பெற்று…
மேலும்

தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் – துரைராஜசிங்கம்

Posted by - April 14, 2017
தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்போது இருக்கின்ற ஒரு சமாதானமான ஒரு நிலைக்கு வரமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஐசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பில்…
மேலும்