நிலையவள்

எச்சரிக்கை: இலங்கை கணணிகளுக்கு சைபர் தாக்குதல்

Posted by - June 28, 2017
ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் தாக்கம் செலுத்தியுள்ள கணினி  மென்பொருள் தாக்கம் இலங்கையின் கணினிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்ரகுப்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது,…
மேலும்

புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

Posted by - June 28, 2017
புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் கடந்த வாரம் சந்திப்பு நடத்தி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சிலவிடயங்களில் அனைத்து தரப்பும்…
மேலும்

தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு

Posted by - June 28, 2017
இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு அடங்கிய மனுவை பௌத்த தகவல் மையம், பொலிஸ்மா அதிபரிடம் இன்று கையளித்துள்ளது
மேலும்

சம்பூர் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தை கைவிட தீர்மானம்

Posted by - June 28, 2017
இந்திய மற்றும் ஜப்பானின் கூட்டு நிதியில் திருகோணமலை – சம்பூரில் நிர்மாணிக்கப்படவிருந்த இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுகின்ற…
மேலும்

சைட்டம் எதிர்ப்பு பேரணிக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு

Posted by - June 28, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான பேரணிக்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம், இன்று நிராகரித்துள்ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தை…
மேலும்

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு! பாதுகாப்பு அமைச்சர் உறுதி

Posted by - June 28, 2017
இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார் தமது பூர்வீக இடமான  இரணைதீவை  தம்மிடம் கையளிக்க வேண்டும் என கோரி அறுபதாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள  இரணைதீவு…
மேலும்

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

Posted by - June 28, 2017
காலி – மாத்தறைக்கு இடையிலான பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – மாத்தறை வரை பயணித்த புகையிரதத்தில் மோதிய இவர் படுகாயமடைந்த நிலையில், கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் மரணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர்…
மேலும்

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

Posted by - June 28, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 5 பிரதிவாதிகளில் இரண்டு பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையால் அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும்

பேஸ்புக் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பலர் கைது

Posted by - June 28, 2017
பேஸ்புக் ஊடாக நபர்களை தொடர்பு கொண்டு ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 25 வெளிநாட்டவர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா, உகண்டா நாட்டவர்கள் அதில் உள்ளடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த சந்தேக நபர்கள், பேஸ்புக் ஊடாக தொடர்பு கொண்டவர்களுக்கு…
மேலும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணமும் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் நடவடிக்கை

Posted by - June 28, 2017
இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும் அதற்கு மேலதிகமான பாதிப்புகளுக்குள்ளான வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…
மேலும்