நிலையவள்

மியர்மார் படுகொலைகளை கண்டித்து வடக்கில் போராட்டம்

Posted by - September 2, 2017
மியன்மாரில் இஸ்லாமிய குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனப் படுகொலையை நிறுத்த வேண்டும் என கோரியும், யாழ் மாவட்டத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர். யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக…
மேலும்

இரு ஆண்டுகளில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள்-சந்திரானி பண்டார

Posted by - September 2, 2017
கடந்த இரண்டு வருடங்களில் நான்கு இலட்சத்து 30,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதாக, அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். மேலும், கடந்த அரசாங்கம் பல ஆண்டுகளாக ஒரு இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்களை மட்டுமே வழங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனுராதபுரம்…
மேலும்

ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் பொன்சேகா முன்வைத்த கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து-ருவன் விஜேவர்த்தன

Posted by - September 2, 2017
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் முன்வைத்த கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரிடமும் உள்ள கருத்து வேறுபாடே இதற்குக் காரணம்…
மேலும்

போதைப்பொருள் பரிமாற்றும் மத்திய நிலையமாக மாறும் இலங்கை-சாகல

Posted by - September 2, 2017
இலங்கை யுத்த காலத்­துக்கு பின்னர் போதைப்­பொருள் பரி­மாற்றும் மத்­திய நிலை­ய­மாக மாற ஆரம்­பித்­துள்­ளது என சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க களுத்­து­றையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், “விடு­த­லைப்­புலி…
மேலும்

ஆர்.சம்பந்தனுக்கு மஹிந்த வழங்கிய இந்திய மசாலா விருந்து

Posted by - September 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் இரு அரசியல் தலைவர்களுக்குமிடையில் முதற் தடவையாக சுமார் அரை…
மேலும்

பொன்னாலை பருத்தித்துறை இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி!

Posted by - September 2, 2017
பொன்னாலை பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தில் காலை 5.30 தொடக்கம் மாலை 7.30 வரையும் இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி வழங்கப்படும் என படைத்தரப்பினர் தெரிவித்துள்ளாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச்…
மேலும்

மீள் குடியேற்ற அமைச்சின் நிதியில் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையம்!

Posted by - September 2, 2017
வட மாகாணத்தில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதியின் மூலம் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையங்கள் அமைப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும்…
மேலும்

யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ள எழுதாரகை!

Posted by - September 2, 2017
எழுவைதீவு மற்றும் அனலைதீவு மக்களின் போக்குவரத்திற்காக புதிதாக கட்டப்பட்ட எழுதாரகை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 5ம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்…
மேலும்

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

Posted by - September 2, 2017
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவர் வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம் (62 வயது) எனத் தெரியவந்துள்ளது. சடலம் மட்டக்களப்பு…
மேலும்

66ஆவது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில் நாளை

Posted by - September 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை கொழும்பு கெம்பல் பூங்காவில் இடம்பெறவுள்ளது. 66ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாளை சிறப்பு கொண்டாட்டங்களையும், மாபெரும் மக்கள் கூட்டத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு…
மேலும்