நிலையவள்

பதுளை – கொழும்பு இரவு பகல் விசேட ரயில் சேவை

Posted by - December 25, 2017
நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றைக் கருத்தில் கொண்டு கொழும்பு- பதுளை நோக்கி பயணிக்கும் விசேட ரயில் போக்குவரத்துச் சேவையை நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய இந்த இரவு பகல் ரயில்…
மேலும்

யாழ் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 24, 2017
யாழ் ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தம்பாட்டியில் அமைக்கப்பட்ட மீன் சந்தையில் கடற்றொழிலாளர்களிடம் புதிதாக அறவிடப்படும் வரியை நிறுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்…
மேலும்

அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக தெரிவிப்பு.

Posted by - December 24, 2017
அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினாலே பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திச்சங்கத்தலைவர் க.பேர்ணாட் தெரிவித்துள்ளார் ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திங்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் கலந்துரையாடல் ஒன்று 23.12.அன்று இடம்பெற்றது அதில் தலைமைதாங்கியுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்டபகுதியில்…
மேலும்

பலாலி இராணுவ முகாம் சிப்பாய் திடீர் மரணம்!!

Posted by - December 24, 2017
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய 29 வயதுடைய இராணுவச் சிப்பாயொருவர் இன்று மரணமடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் சுகவீனமுற்ற நிலையில் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று மரணமானார்.…
மேலும்

பருந்திதுறையில் கஞ்சா கலந்த புகையிலை தொகையுடன் மூவர் கைது

Posted by - December 24, 2017
கஞ்சா கலந்த 100 கிலோ கிராம் புகையிலையை தம்வசம் வைத்திருந்த 3 பேர் பருந்திதுறை கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பாருத்திதுறை காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த போதைப்பொருளை கொண்டு…
மேலும்

தொல் பொருட்களை சேதப்படுத்தினால் 20 இலட்சம் வரை அபராதம் விதிக்க யோசனை

Posted by - December 24, 2017
தொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார். தற்போது, இந்தக் குற்றங்களுக்காக 50,000 ரூபா அபராதமே விதிக்கப்படுவதாக தொல்பொருள் மேலதிக பணிப்பாளர்…
மேலும்

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும்!-மாவை

Posted by - December 24, 2017
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் உரிமைக்காக போராடிக் கொண்டும் இருக்கின்ற வேளையில் நாட்டில் சம உரிமையோடு வாழ்வதற்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தொடர்ந்தும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்டப்…
மேலும்

புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில்

Posted by - December 24, 2017
மக்களின் உடமைகளுக்கும் அரச சொத்துக்களுக்கும் இழப்பினை ஏற்படுத்திய ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி…
மேலும்

எமது ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிப்போம்.!- பஷில்

Posted by - December 24, 2017
நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என…
மேலும்

நான் ஒரு போதும் ஐ.தே.கட்சிக்கு செல்லமாட்டேன்- கெஹெலிய

Posted by - December 24, 2017
தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக சிலர் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்…
மேலும்