நிலையவள்

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞனுக்கு நஷ்டஈடு

Posted by - June 16, 2018
கடந்த 8 ஆம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபாவினை ஒப்பந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடாக வழங்கியுள்ளன. தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும்…
மேலும்

வேற்றுமைகள் – கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம்!-ஹிஸ்புல்லாஹ்

Posted by - June 16, 2018
நாட்டில் இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி ஏற்பட எமக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளையும் கருத்து முரண்பாடுகளையும் மறந்து ஒன்றுபடுவோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை,…
மேலும்

3 ஆவது நாளாக தொடரும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் பணி பகிஷ்கரிப்பு

Posted by - June 16, 2018
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும் தமக்கு உரிய தீர்வு கோரியும் கடந்த 14 ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட செயலகம் முன்பாக தமது…
மேலும்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்திப்பு

Posted by - June 16, 2018
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் கலாநிதி யுக்கியோ ஹடோயாமா கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர், இரு நாடுகளுக்கும்…
மேலும்

அரசை எதிர்ப்பதா? இல்லையா? இறுதி முடிவு விரைவில்-மாவை

Posted by - June 16, 2018
அரசோடு ஒத்துப்போவதா? இல்லை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பது குறித்து , தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பு என்பவற்றின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் “ என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
மேலும்

இலங்கையில் கடல் ஆய்வை மேற்கொள்ள வருகிறது நோர்வே கப்பல்

Posted by - June 16, 2018
எதிர்வரும் 21ஆம் நாள் இலங்கை வரவுள்ள இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆய்வுகளில் இலங்கை , மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபடவுள்ளனர். இலங்கை…
மேலும்

ரமழான் போதிக்கும் பாடங்களை பின்பற்றினால் பிரச்சினை தீரும்- ரணில்

Posted by - June 16, 2018
மனிதாபிமானம் மற்றும் தாராள மனப்பான்மை போன்ற ரமழான் கற்றுத்தரும் பாடங்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றுவோமானால் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு முழு மனித சமுதாயமும் புதிய வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்ல முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் ஈகைத்…
மேலும்

மனதைத் தூய்மைப்படுத்திய நோன்பின் சந்தோஷமே ஈகைத் திருநாள்- சிறிசேன

Posted by - June 16, 2018
மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்வதே முதன்மையான நோக்கம் எனவும், இதற்கு அடிப்படையான புனித ரமழான் நோன்பை முடித்துக் கொண்டு கொண்டாடும் இந்த ஈகைத் திருநாள், சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றுக்கு வழியமைக்கட்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
மேலும்

வீட்டில் தனிமையில் இருந்தவர் கொலை

Posted by - June 15, 2018
வெல்லவாய, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானாகல, வெஹரயாய பிரதேசத்தில் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹந்தபானாகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய கரவிட வெதகே ஜகத்…
மேலும்

நீர்கொழும்பில் கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை

Posted by - June 15, 2018
கடலுக்கு குளிக்கச் சென்ற 05 மாணவர்களுள் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். நீர்கொழும்பு, எட்டுக்கல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போயுள்ள இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று…
மேலும்