நிலையவள்

சிங்கப்பூர் நோக்கி ரணில்

Posted by - July 8, 2018
ரணில் விக்ரமசிங்க இன்று காலை சிங்கப்பூர் நோக்கி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற உள்ள 06 ஆவது ´சர்வதேச நகரம்´ மாநாடு உள்ளிட்ட சில கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
மேலும்

கூட்டுறவுத் துறையை மேம்படுத்த விரைவில் துரித நடவடிக்கை- மைத்திரிபால

Posted by - July 8, 2018
கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான காத்திரமான தீர்மானங்களை அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேசிய கூட்டுறவு சபை,  சம்பந்தப்பட்ட அமைச்சுடன் இணைந்து வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.…
மேலும்

புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் பலி

Posted by - July 8, 2018
ரத்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத கடவை மூடப்பட்டிருந்து சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் காலியில் இருந்து மருதனை நோக்கி பயணித்த புகையிரதத்துடன்…
மேலும்

ரணிலின் சவாலுக்கு மஹிந்தவும் பதில் சவால்

Posted by - July 8, 2018
அர்ஜூன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்து வந்த அடுத்த கனம், நான் பாராளுமன்றத்தில் நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் அறிவிப்புச் செய்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி குறித்து தன்னை பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்யச் சொல்வதற்கு…
மேலும்

மெனிங் சந்தையிலுள்ள பழங்களில் இரசாயனப் பொருட்கள் பயன்பாடு இல்லை- உபசேன

Posted by - July 7, 2018
கொழும்பு மெனிங் சந்தையிலுள்ள பழ விற்பனை நிலையங்களில் மனித உடலுக்கு ஆபத்தான எந்தவொரு இரசாயனப் பொருட்களையும் பழங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் புகை அடித்து பழங்களைக் கனிய வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கத்…
மேலும்

பழைமை வாய்ந்த சிறிய குளக்கட்டமைப்பை சீர் செய்வதற்கான வேலைத்திட்டம்-அமரவீர

Posted by - July 7, 2018
நாட்டில் பழைமை வாய்ந்த சிறிய குளக்கட்டமைப்பை சீர் செய்வதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்காக அரசாங்கம் தொள்ளாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் குளக்கட்டமைப்பில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உண்டு. இவற்றை சீர்…
மேலும்

அரசாங்கம் வழங்கியுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் எதிர்க்கட்சி அரசியல் இலாபம்-சஜித்

Posted by - July 7, 2018
தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்வதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கூறுகிறார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சி…
மேலும்

வவுனியாவில் மர்மப் பொருள் மீட்பு

Posted by - July 7, 2018
வவுனியாவில் நேற்று இரவு மரக்காரம்பளை பகுதியிலிருந்து  இரும்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு பொலிசாரின் அவரச தொலைபேசி அழைப்புக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ற பொலிசார் மரக்காரம்பளை பகுதியிலிருந்து கைவிடப்பட்ட இரும்பு பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளனர். முற்றிலும்…
மேலும்

போராட்டத்துக்கு தயாராகும் கூட்டு எதிரணி

Posted by - July 7, 2018
மக்கள் வெள்ளம்’ என்ற தொனிப்பொருளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக்கோரி நாடு தளுவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர். இப் போராட்டமானது எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும் குறித்த இந்தப்…
மேலும்

விகிதாசார முறை தேர்தலுக்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு – ரமேஷ் பத்திரண

Posted by - July 7, 2018
மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கு கூட்டு எதிர்க்கட்சி பூரண ஆதரவு வழங்குவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்…
மேலும்