நிலையவள்

பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது

Posted by - July 25, 2018
மொணராகல பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரலாறு…
மேலும்

விஜயகலா தொடர்பான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று – அகிலவிராஜ்

Posted by - July 25, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை, இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளருமான அமைச்சர் அகிலவிராஜ்…
மேலும்

தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசுக்கு விரும்பவில்லை – நாமல்

Posted by - July 25, 2018
அரசியல் யாப்பு மாற்றத்தினை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , அதன் காரணமாகவே 20ஆவது திருத்த சட்டமூலம் தனிநபர் பிரேரணையாகபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை…
மேலும்

எந்த இனத்துக்கும் தமது மொழி, தமது மதம், தமக்கான சுதந்திரம், தனித்துவம் என்பது மிக அவசியமானதாகும்- சந்திரிகா

Posted by - July 25, 2018
பல்லினத் தன்மையை ஏற்றுக் கொண்டு அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படும் போதே பிரச்சினையற்ற ஒரு சூழலை ஏற்படுத்த முடியும் எனவும், இதனை இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

A9 வீதியில் விபத்து – 19 பேர் காயம்

Posted by - July 25, 2018
யாழ்ப்பாணம் – கண்டி, A9 பிரதான வீதியில் பூனேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வரை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்…
மேலும்

தங்கம் கடத்திய இருவர் கைது

Posted by - July 24, 2018
சட்டவிரோதமான முறையில்  தங்கம் கடத்திய இருவரை இலங்கை  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கற்பிட்டி கிம்புல்பொக்க கடற்பரப்பில் வைத்து குறித்த இருவரும் 5.7 கீலோ கிரேம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 20 மில்லியன் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும்…
மேலும்

வாகன விபத்தில் இரு மாணவர்கள் காயம்

Posted by - July 24, 2018
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு பாடசாலை மாணவர்கள் படுகாயமைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று  மாலை 3.00…
மேலும்

இராணுவத்திற்கு இடம் கொடுப்பது ஒட்டகத்திற்கு இடம் கொடுப்பது போல – சிவாஜிலிங்கம்

Posted by - July 24, 2018
யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாதென்றும் கோட்டைக்குள்ளிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை…
மேலும்

அரசாங்கத்தை கவிழ்க்க கள்ளர்களுடன் GMOA ஒப்பந்தம்-அஜித் மானப்பெரும

Posted by - July 24, 2018
5 வருடங்களுக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு கள்ளர்கள் மூலம் ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…
மேலும்

இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் வழங்குவதாகச் சீனா தெரிவிப்பு

Posted by - July 24, 2018
இலங்கை இராணுவத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை வழங்கவுள்ளதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, இலங்கையின் முப்படைகளுக்கும் பல்வேறு பயிற்சிகளை இந்த ஆண்டும் சீன தொடர்ச்சியாக வழங்கவுள்ளதாகவும் கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் சிரேஷ்ட கேணல் ஸி…
மேலும்