நிலையவள்

கூட்டு எதிரணியின் பேரணியில் சில ஐ.தே.க.வினரும் இணைவர்-காஞ்சன விஜேசேகர

Posted by - August 30, 2018
கூட்டு எதிரணியினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கூட்டு எதிர்க் கட்சியினர் மாத்திரமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பொராளை என்.எம்.பெரேர நிலையத்தில் இன்று…
மேலும்

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 30, 2018
பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13  ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் இன்று கொழும்பு கோட்டை நீதிவான்…
மேலும்

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

Posted by - August 30, 2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கோரிய அழைப்பாணை உத்தரவின் பிரதியை வழங்குவதற்கு சட்ட சிக்கல் இல்லை என சர்வதேச பொலிஸாருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்  அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளும்…
மேலும்

மாகந்துரே மதூஷின் இரு சகாக்கள் கைது

Posted by - August 30, 2018
பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷின் இரு சகாக்களை கைதுசெய்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இருவரையும் ஹோமாகமை மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களை கைதுசெய்த போது அவர்களிடமிருந்து ரி- 56 ரக…
மேலும்

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

Posted by - August 30, 2018
வவுனியா – மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோது இன்று பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று தமது வழமையான…
மேலும்

இலங்கை – மியன்மார் இடையிலான வர்த்தக உடன்படிக்கையை பலப்படுத்த இரு தலைவர்களும் இணக்கம்

Posted by - August 30, 2018
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான இணைந்த வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்தி இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை புதியதோர் பாதையில் முன்னெடுக்க இருநாடுகளினதும் அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனப்படும்…
மேலும்

ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கை கரையோர பாதுகாப்பு படைக்கு 2 கப்பல்கள் அன்பளிப்பு

Posted by - August 30, 2018
இலங்கை கரையோர பாதுகாப்பு படைக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரண்டு ஆழ்கடல் ரோந்துப் கப்பல்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது. ரோந்துப்பணி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் மாசடைதலை தடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள…
மேலும்

கிளிநொச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - August 30, 2018
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட கறுப்பையா நித்தியகலாவின் குடும்பத்துக்கு நீதி கோரியும், கிளிநொச்சியில் நாளை (31) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்,…
மேலும்

தாயை கொலை செய்த மகன் கைது

Posted by - August 30, 2018
தனது தாயை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வீரகெடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். வீரகெடிய, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெடிய, ஹகுருவெல பகுதியில் கடந்த 27 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட…
மேலும்

யாழில் கிணற்றிற்குள் தவறிவீழ்ந்து பச்சிளம் குழந்தை பரிதாபமாகப் பலி!!

Posted by - August 30, 2018
அராலி மேற்குப் பகுதியில் ஒரு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் நிலக்சன் என்ற ஆண் குழந்தையே நேற்று (29.08.2018) இவ்வாறு உயிரிழந்துள்ளது.நேற்று மாலை 3.30 மணியளவில் தாயுடன் முற்றத்தில் இருந்து விளையாடிக் கொண்டிருந்த…
மேலும்