நிலையவள்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

Posted by - September 13, 2018
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 163 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளன. மேலும் அமெரிக்க…
மேலும்

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டத்திற்கு அவசர அழைப்பு!

Posted by - September 13, 2018
அமைச்சரவை இன்று மதியம் அவசரமாகக் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது. எனினும், இந்த அவசர அமைச்சரவைக்…
மேலும்

யாழ் நீதிமன்றில் காணாமலாக்கப்பட்ட இளைஞர் குறித்து சாட்சியம்

Posted by - September 13, 2018
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றமையை நேரில் கண்ட நபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை…
மேலும்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அதி உயர கோபுரம்

Posted by - September 13, 2018
திராவிடர் கட்டிடக் கலைப் பண்பாட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அதி உயர வரவேற்புக் கோபுரம் ஒன்று கடந்த திங்கட்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கண்ணகைபுரத்தில், கண்ணகையம்மன் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்திற்குச் செல்கின்ற பக்தர்கள், யாத்திரிகர்களை…
மேலும்

நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர்-கி.ஜெயசிறில்

Posted by - September 13, 2018
இந்த நாட்டில் இடம்பெற்ற கொடுங்கோலாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து  நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர் எனத் தெரிவித்த காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், பொத்துவில் தமிழ் மக்களது அவலக்குரல் ஒரு மாதகாலமாக ஒலிக்கின்ற போதிலும் இன்னும் நல்லாட்சியின்…
மேலும்

அட்டனில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

Posted by - September 13, 2018
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் டன்பார் பகுதியில் உள்ள உள் வீதி ஒன்றின் பூஞ்செடிகள் வளர்க்கப்படும் பாத்தி ஒன்றில் இருந்து ரி- 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ஆறு ரவைகள் மீட்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 9 மணி அளவில்…
மேலும்

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - September 13, 2018
வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ்ஸை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே மறித்து பொலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில்…
மேலும்

முருங்கன் வைத்தியசாலைக்கு மேலதிக வைத்தியர்களை நியமிக்க கோரிக்கை

Posted by - September 13, 2018
மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தற்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை அதிகமாக காணப்படுவதோடு, வைத்தியர்கள் ஓய்வில்லாமல்  பணிபுரிகின்றனர். இவர்கள் விடுமுறைகளில் சென்றால் அனைவரும் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக முருங்கன் வைத்தியசாலை…
மேலும்

முல்லைத்தீவு கைவேலிப்பகுதியில் வாள்வெட்டு

Posted by - September 13, 2018
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். செவ்வாய்கிழமை  இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று…
மேலும்

கொழும்பில் இரண்டு மாடி வீட்டில் தீ

Posted by - September 13, 2018
கொழும்பு – 02, பார்க் வீதி பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று காலை தீப்பரவியுள்ளது. இந்த தீயினால் வீட்டின் மேல் மாடி முழுமையாக தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 06.00 மணியளவில் இந்த தி விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பரவலையடுத்து…
மேலும்