நிலையவள்

ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது

Posted by - September 19, 2018
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான…
மேலும்

முச்சக்கர வண்டியின் கட்டணம் அதிகரிக்கிறது

Posted by - September 19, 2018
எரிபொருட்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் முச்சக்கர வண்டி பயணத்தின் முதலாவது கிலோமீற்றருக்காக 60 ரூபா அறவிடப்பட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின்…
மேலும்

சீனி விலை 15 ரூபாவால் அதிகரிப்பு – சீனி இறக்குமதியாளர் சங்கம்

Posted by - September 19, 2018
இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் மொத்த விற்பனை விலை உடனடி அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக சீனி இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இறக்குமதி…
மேலும்

வரவு-செலவுத் திட்டம் நவம்பர் 5 இல்

Posted by - September 19, 2018
வரவு – செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி முன்வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி முன்வைக்கப்பட்டு டிசம்பர் 08 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு…
மேலும்

தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு தடை

Posted by - September 19, 2018
போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்ய, விரைவில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இவ்வாறு விற்பனை செய்வது தொடர்பிலான  சட்டத்தைக்  கடுமையாக்குவதற்கு, தென்னைப் பயிர்ச் செய்கை சபை தீர்மானித்துள்ளது. சந்தையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய்  உற்பத்தியைத்…
மேலும்

போதைப்பொருட்களுடன் இருவர் கைது

Posted by - September 19, 2018
ஹபராதுவ, உணவடுன பகுதியில் ஹசீஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொரளை பகுதியில்…
மேலும்

நாலக சில்வாவுக்கு கட்டாய விடுமுறை வழங்க பரிந்துரை

Posted by - September 19, 2018
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் செய்யும்…
மேலும்

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - September 19, 2018
தலைமன்னார் கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்று காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த மீனவர் ஒருவர் மூன்று தினங்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி பிற்பகல் 6 மணியளவில் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 39…
மேலும்

இன்று பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை’ மீதான விவாதம்

Posted by - September 19, 2018
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்பித்த ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை’ மீதான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் இன்று  இடம்பெறவுள்ளது. ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை’ ஒன்றினை உருவாக்குவது தொடர்பான…
மேலும்

பஸ் கட்டணம் அதிகரிக்கிறது

Posted by - September 19, 2018
பஸ் கட்டணம் 4 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பஸ் கட்டண அதிகரிப்பு நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ஆரம்ப பஸ்கட்டணத்தில் எவ்வித மாற்றங்களுமில்லை என…
மேலும்