நிலையவள்

கண்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 27, 2017
ஓன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் கண்டி தபால் நிலையத்திற்கு முன்னால் விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.தபால் திணைக்களம் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும்

போட்மோர் தோட்டத்தில் 50 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!!!

Posted by - December 27, 2017
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்மோர் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் 50 கிலோ மரை இறைச்சியை வைத்திருந்த ஒருவரை இன்று  காலை 11.30 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மரை இறைச்சியை  வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போபத்தலாவ…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் ஓர் அங்கமாகவே மஹிந்த தலைமையிலான குழு களமிறங்குகிறது- சுசில்

Posted by - December 27, 2017
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒர் அங்கமாகவே போட்டியிடுகின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த…
மேலும்

தெற்காசியாவில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவு

Posted by - December 27, 2017
தாய், சேய் மரண புள்ளி விபரங்களின் அடிப்படையில், 2016ம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை குடும்ப சுகாதார அலுவலக பணிப்பாளர் வைத்தியர் பிரியானி சேனாதீர மற்றும் சமூக வைத்திய நிபுணர் கபில ஜெயரத்னவால்…
மேலும்

நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை

Posted by - December 27, 2017
உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலையாக…
மேலும்

மதுபானசாலை அமைவதை எதிர்த்து பெரியபரந்தன் மக்கள் மகஜர் கையளிப்பு

Posted by - December 27, 2017
கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதை எதிர்த்து பிரதேச மக்கள் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்று (27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலாளர் த.…
மேலும்

பாடசாலை பாதணிகளுக்கான வவுச்சர் திகதியை நீடிக்க கோரிக்கை.!

Posted by - December 27, 2017
நுவரெலியா மாவட்டத்தை  சேர்ந்த  தெரிவுசெய்யப்பட்ட  பாடசாலை  மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் கடந்த 20ம் திகதியே குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி  திணைக்களத்தினால் வழங்கப்படுள்ளது. எனினும்  அந்த வவுச்சரைக் கொண்டு பாதணிகளை  கொள்வனவு செய்ய இம்  மாதம் 31ம்  திகதியே இறுதி …
மேலும்

சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின் கீழ் ஒரு தொகை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை

Posted by - December 27, 2017
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின கீழ் ஒரு தொகை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வீ.வரதராஜன் தெரிவித்தார். சூழல் பாதுகாப்பு…
மேலும்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.!

Posted by - December 27, 2017
இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம்…
மேலும்

கச்சத்தீவில் அந்தோணியார் திரு விழா : தமிழக பங்குதந்தைகளுக்கு அழைப்பு!

Posted by - December 27, 2017
எதிர் வரும் பெப்ரவரி மாதம்  23 மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளது.அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு  இந்திய பக்தர்களின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து தர தமிழகத்திலுள்ள பங்குதந்தைகளுக்கு யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்