தென்னவள்

அத்திலாந்திக் மாகாணங்களின்வளர்ச்சிக்காக குடிவரவை ஊக்குவிக்கவும் திட்டம்

Posted by - July 5, 2016
அத்திலாந்திக் மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வண்ணமும்  அங்கே வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வண்ணமும், அபிவிருத்திக்கான ஒரு புதிய செயற்றிட்டத்தை உருவாக்க மத்திய அரசு, நான்கு  அத்திலாந்திக் மாகாணங்களின் முதல்வர்களுடன் இணைந்து செயலாற்றத் தீர்மானித்துள்ளது.
மேலும்

வடக்கில் தொடரும் ஆயுத மீட்புக்கு பின்னால் பாரிய சதி – சிறிதரன்

Posted by - July 5, 2016
வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக்காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்.
மேலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

Posted by - July 5, 2016
வடக்கிற்காக பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு உரிய இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு  தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என  மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும்

இலங்கை கடற்பரப்பில் தமிழக இழுவை படகு மீன்பிடிக்கு அனுமதி?

Posted by - July 5, 2016
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் பரிந்துரைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கொத்து குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் அது தவறில்லையாம்- பரணகம

Posted by - July 5, 2016
ஸ்ரீலங்காவில் இறுதி கட்ட யுத்தத்தில் கிளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும் அது சட்டவிரோதமானது அல்லவென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இறுதி கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கொத்து குண்டுகளுக்கான சர்வதேச ரீதியிலான தடை…
மேலும்

எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் எமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம்

Posted by - July 5, 2016
உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது.
மேலும்

பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை

Posted by - July 5, 2016
வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 1-ந் தேதி புகுந்த 7 பயங்கரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பணயக்கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

புதுவை மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல்

Posted by - July 5, 2016
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

ராம்குமார் கொலையாளி என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை

Posted by - July 5, 2016
சுவாதியை கொலை செய்த ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், அவருக்கு தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இன்னும் 2 நாளில் அவனை புழல் சிறைக்கு மாற்ற போலீசார் திட்டமிட் டுள்ளனர்.
மேலும்

திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ ஆவன செய்ய கவிஞர் வைரமுத்து கோரிக்கை

Posted by - July 5, 2016
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் புத்தகத்தின் 12-ம் பதிப்பு அறிமுக விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறுகதைகளை ஆய்வு செய்து பேசினார். நிறைவாகக் கவிஞர் வைரமுத்து ஏற்புரை…
மேலும்