பல்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதால் அவரது கடமைகளை பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தற்காலிகமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள்.…
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார்.