கிர்கிஸ்தான் நாட்டு தலைநகரான பிஷ்கெக்-கில் உள்ள சீன தூதரகம் அருகே இன்று நிகழ்ந்த கார்குண்டு தாக்குதலில் பலர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேச ஊடக அதிபருமான மிர் காசிம் அலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க ராணுவம் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்துள்ளது.அமெரிக்காவின் ஆயுத குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மையம் சமீபத்தில் பென்டகனின் ராணுவ ஆயுத கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட…
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன் தலைமையிலான குழுவினர் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சபாபதி நலன்புரி நிலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட வரைந்த ஒரு கேலிச்சித்திரமே அவரைக் கடத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் இதனைத் தெரிவிப்பதாகவும் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
கொழும்பின் பம்பலப்பிட்டிப் பிரதேசத்தில் வசித்துவந்த கோடீஸ்வர செல்வந்தரான மொஹமட் சுலைமானின் கொலை, பலமாதங்களாக திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமராக்களை ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.