அண்டைநாடான பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கான நிர்பந்தங்கள் தங்கள் நாட்டின்மீது விதிக்கப்படுவதாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரைப் பற்றி பேஸ்புக்கில் தவறாக விமர்சித்ததாக பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சமாதி உள்ளது. இங்கு கடந்த ஜூலை 27-ந்தேதி முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. அப்போது அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி, அறிவுசார் மையம், நினைவு…
ஓடும் பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொன்ற வழக்கில் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்த முகமது ரபீக் மகன் கொலைக்கு பழி தீர்க்க கருப்பசாமியை சுட்டுக்கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் நாளை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார்.
இலங்கை மத்திய வங்கி வசமிருந்த இரகசியத் தரவுகள் வெளியில் கசிந்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாரிடம் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்ற தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.