அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பை உடனடியாக இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு…
பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விசனம்…
முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திர தின நிகழ்வில் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட அரசாங்கம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்கும் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகவும் இருவரையும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சமாதானப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சண்டேலீடர் பத்திரிகையாசிரியரை தானே கொலை செய்ததாக ஓய்வுபெற்ற முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் முறைப்படி நியமனம் செய்யப்பட்டார்.ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனைதொடர்ந்து இந்தப் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் ரகசிய வாக்கெடுப்பு…
70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88). தனது 18 வயதில், 1946-ம்…