பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டமூலம் தொடர்பிலான தீர்ப்பு, இன்னும் சில நாட்களின் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17) தெரிவித்துள்ளது.
சுயாதீன ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது அதனை இல்லாமல் செய்து விடுவதற்கோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவொரு எண்ணமும் கிடையாது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நேற்றுத் திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.
சிறீலங்காவின் ஆட்சியாளர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளதால் நாட்டின் அரச நிர்வாகத்திற்கு பிரதம நீதியரசர் ஸ்ரீபவனே பொறுப்பாக உள்ளார் என வெளிவந்த தகவலில் உண்மையில்லையென சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரித்தானியா பயணமாகியுள்ளதால், அவர் நாடு திரும்பும் வரை தற்காலிகமாக வடக்கு மாகாண முதலமைச்சராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பாடுபட்ட புரவெசி பலய என்ற மக்கள் சக்தி அமைப்பு சண்டித்தனம் புரிகின்ற பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைப் போன்று செயற்பட்டு வருவதாக அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.
பேஷ்புக் மூலம் பல்வேறு கதைகளை பிரச்சாரம் செய்து சிலர் அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சடலங்களை ஒப்படைக்க இலஞ்சம் கோருவதாக மத்திய சுகாதார அமைச்சரிற்கு புகார் செய்யப்பட்டுள்ளது.தென்மராட்சியை சேர்ந்த பொது அமைப்புக்கள் இணைந்து இலங்கை சுகாதார அமைச்சரிற்கு கையளித்துள்ள புகாரின் பிரதிகள் இலங்கை ஜனாதிபதி முதல் பிரதமர்,வடமாகாண முதலமைச்சர்…