முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.பல்கலைகழக வாயிலை திறக்குமாறு கோரி மாணவர்களை துணைவேந்தர் கோரியதை அடுத்து மாணவர்களுக்கும் துணைவேந்தருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதி கோரி சக மாணவர்கள் இன்று காலை முதல் பல்கலைகழக வாயில் கதவினை மூடி…
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அரச தரப்பில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் இடையில் நின்று போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதால் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு சரியக்கூடும் என்ற நிலையில் பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபெஸ்,…
விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிந்து பல்வேறு ஆய்வுகளை செய்துவந்த மூன்று விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பி, கஜகஸ்தான் நாட்டில் தரையிறங்கினர்.
ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலியானார்கள்.ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம்.
துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி நடந்தது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி சி.எச்.பி. கட்சி ஆகும். அந்த கட்சியின் துணைத்தலைவராகவும், எம்.பி.யாகவும் இருப்பவர் புலன்ட் டெஸ்கான்.