முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக சென்னைக்கு ராணுவ விமானத்தில் ரூ.300 கோடிக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
டெல்டா மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். விவசாயிகள் தற்கொலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
வடக்குக் கிழக்கு மக்களுக்கு காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் எலோசியஸ் சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர்களை இத்தாலிக்கு அனுப்பி வைக்க ஊவா மாகாண முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.