யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினரால் உயர்தர பாடசாலை மாணவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையமொன்று இன்று திறக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாலும், இவரது கருத்துகள் தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கமளிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு சீன அரசாங்கத்தின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.