நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் உலக பொருளாதார நிலைமையால் வளர்ச்சிவீதத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரும் அவரது சகோதரரும் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஏற்படவுள்ளமையால், அதன் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தரின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொத்தர் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல் விநியோகத்தின் போது ஆலை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதாக சிலர் தன்மீது குற்றம் சுமத்துவதாகவும், தான் அவ்வாறு நடந்து கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி ஹாரிசன் கூறினார்.
கடந்த அரசாங்கம் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் திருடியதாகவும், தற்போதைய அரசாங்கம் விற்பனை மூலம் திருடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.