ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் இப்பொழுது திருப்புமுனையில் வந்து நிற்கிறது. எவரும் எங்களைக் கைவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவசர நிலைமைகளின்போது செயற்படுவதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் தலைமையில் படைப்பிரிவு ஒன்றை அமைக்கும் ஜனாதிபதியின் யோசனை குறித்து தம்மால் வெளியிடப்பட்ட அறிக்கையை தாம் பொறுப்புடன் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படப்போவதாக வெளியான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.