சீகிரிய பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க கனேடிய பிரஜை ஒருவருக்கு 300 ஏக்கர் காணி வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (29.06) மூன்று முறைப்பாடுகள் பதியப் பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்களின் பெயர் விவரங்கள் அடுத்த மாத இறுதியில வெளியிடப்படும் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் பன்னாட்டு மீனவர்கள் மீன் பிடித்தலைத் தடுத்தல், தடை செய்யப்பட்ட மீனவ உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்டவைகளைத் தடுப்பதற்கு உரிய சட்டம் நாடாளுமன்றில் அடுத்த வாரம் இயற்றப்படும்.
உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று, நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை போஷாக்கு நிறைந்த மாவட்டமாக நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மாற்றுவோம் என கடல்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொப்கில் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.