அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது.
மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்துக்குள், 23 தெரு நாய்களுக்கு நஞ்சு கொடுத்து கொன்றமை தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், விலங்கு ஆர்வல்கள் இது குறித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி, இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இலங்கையர் உட்பட மூவரை, இந்தியாவின் மத்திய குற்றப்பிரிவு பொலிஸ் கைதுசெய்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திவ்யன் (வயது 30), இந்தியா…