முன்னாள் ஜனாதிபதியும் அவரது கட்சியை சேர்ந்தவர்களும் சிங்கள, பௌத்த மக்களிடம், ஏனைய இன மக்கள் தொடர்பிலான தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு, இனங்களிடையே விரிசல்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற, அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு கால நிறைவையொட்டி, ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் ஏற்பாட்டில் இன்று வரவேற்பு நிகழ்வொன்று நடைபெற்றது. இதன் நிமித்தம் நுவரெலியாவுக்கு சென்ற ரணில், ஆரம்ப நிகழ்வாக…
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி, நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது, மக்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கே ஆகும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவ வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் புலம்பெயர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில மருத்துவ உபகரணங்களுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வன வள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.