கனடாவில், ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை தேடுவதாக, பொலிசார் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் இரவு 9.17 மணியளவில் நடந்திருக்கின்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளிக்காக அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக நினைக்கக்கூடாது என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.
தமது கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து தாம் வைத்திய வசதிகளைப் புறக்கணிக்கப்போவதாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும்இ உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தாயொருவர் மாரடைப்பினால் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே இதற்குக் காரணம்.
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.