நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஏ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின், அபிவிருத்தி பணியின் 80 சதவீதம் நிறைவுற்றுள்ளதாகவும், இரண்டு வருடங்களின் பின் இம்முறை வழமையை விட இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்க கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அரசு அலுவலகங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் ஏடன் பகுதியில் உள்ள கோர் மஸ்கார் மாவட்ட அரசு அலுவலகம் மீது தீவிரவாதிகள் இன்று கார்…
ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வியட்நாம் கடற்பகுதியில் மையம் கொண்டுள்ள தாம்ரே புயலினால் 19 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.