தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி இன்று (17) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது.
ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டிரம்ப் அரசின் நடவடிக்கையால் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது.
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.