மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன.
அரசு ஆஸ்பத்திரியில் உயிருடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு பதிலாக அவரது குடும்பத்தினரிடம் அவர் இறந்து விட்டதாக கூறி இறந்த மற்றொருவர் உடல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு பின்னரும் இரகசிய நடவடிக்கைகளுக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தங்கியிருந்த பாதுகாப்பு குடியிருப்புகள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் உட்பட சகல தகவல்களையும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதால், மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் முன்னால் இன்று முற்பகல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.